பெல்கொரொட் எல்லையில் அவசரநிலையை பிரகடனம் செய்தது ரஸ்யா

உக்ரைனிய படையினரின் புதிய தாக்குதல்களை தொடர்;ந்து ரஸ்யா தனது பெல்கொரொட் எல்லை பிராந்தியத்தில் அவசரகால நிலைமையை அறிவித்துள்ளது.

ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ள உக்ரைனிய படையினர் பல சதுர கிலோமீற்றரினை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ள நிலையிலேயே பெல்கொரொட் எல்லையில் ரஸ்யா அவசரநிலைமையை  பிரகடனம் செய்துள்ளது.

 

பெல்கொரொட் பிராந்தியத்தில் நிலைமை  தொடர்ந்தும் கடினமானதாக பதற்றமானதாக காணப்படுகின்றது என பெல்கொரொட் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

உக்ரைனிய படையினர் முன்னேறத் தொடங்கியதை தொடர்ந்து பெல்கிரொட்டின் எல்லைப்பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் அவசரஅவசரமாக வெளியேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எதிர்பாரத விதத்தில் தனது தந்திரோபாயங்களில் மாற்றங்களை மேற்கொண்டுள்ள உக்ரைன் ரஸ்யாவிற்குள் ஊருடுவியுள்ளது.

இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ரஸ்யாவிற்குள் வேறுநாட்டு படையொன்றை நுழைந்துள்ளமை இதுவே முதல்தடவை.