யுத்தகுற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்குட்படுத்துவோம் -சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர்

சிரிய மக்களை சித்திரவதைக்குட்படுத்திய முன்னாள் ஜனாதிபதி பசார் அல் ஆசாத்தின் அதிகாரிகளின் பெயர் விபரங்களை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ள சிரியாவின் கிளர்ச்சி குழுவின் தலைவர் யுத்த குற்றவாளிகளை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என தெரிவித்துள்ளார்.

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இராணுவ உயர் அதிகாரிகள்  பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த தகவல்களை வெளியிடுபவர்களிற்கு சன்மானம் வழங்கப்படும் என அபுமுகமட் அல் ஜொலானி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை,கொலைகாரர்களை சிரிய மக்களை சித்திரவதை செய்த பாதுகாப்பு தரப்பினரை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவோம் யுத்த குற்றவாளிகளை தேடுவோம் அவர்கள் வெளிநாடுகளில் இருந்தால் அவர்களை ஒப்படைக்குமாறு வேண்டுகோள் விடுப்போம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.