வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர்

பிரான்ஸ் நாட்டவர் ஒருவர் வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் அதிரவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.

வெளிநாட்டவரை கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர்

சனிக்கிழமையன்று, தெற்கு பிரான்சில் Christophe B. என்னும் பிரான்ஸ் நாட்டவர், துனிசியா நாட்டவரான Hichem Miraoui (46) என்பவரை சுட்டுக்கொன்றார்.

வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர்: வெளியாகியுள்ள திடுக் தகவல் | France Suspect Kills Tunisian Neighbour In Racism

கிறிஸ்டோபின் மனைவி பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் அவரை கைது செய்துள்ளார்கள். விடயம் என்னவென்றால், கிறிஸ்டோப், Miraouiஐ சுட்டுக் கொல்வதற்கு முன்பும் அவரை சுட்டுக்கொன்ற பின்பும், இனவெறுப்பு வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டவர் ஒருவரைக் கொலை செய்த பிரான்ஸ் நாட்டவர்: வெளியாகியுள்ள திடுக் தகவல் | France Suspect Kills Tunisian Neighbour In Racism

தான் வெளியிட்டுள்ள வீடியோக்களில் ஒன்றில், வெளிநாட்டவர்களை சுட்டுக்கொல்ல பிரான்ஸ் நாட்டவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் கிறிஸ்டோப்.

மேலும், தீவிரவாதத்தின் மூலம் நாட்டின் சட்டம் ஒழுங்கைக் கெடுக்க அவர் விரும்பியதாகவும், பிரான்ஸ் கொடியின்மீது உறுதி எடுத்துக்கொண்டதாகவும் வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளன.

ஆகவே, பிரான்ஸ் வரலாற்றில் முதன்முறையாக தீவிரவாத தடுப்பு அதிகாரிகள் இந்த வழக்கை தங்கள் கையில் எடுத்துள்ளார்கள்.