நிரந்தரமான நல்லிணக்கத்திற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் இதனை கோருவதில் நாங்கள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் உறுதியாக உள்ளேன் என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது-
யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைகூரும் உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களுடன் நானும் இணைந்துகொள்கின்றேன்.
தமிழ் தேசிய நினைவுதினம் சுயநிர்ணய உரிமைக்காக தங்கள் உயிர்களை இழந்தவர்களையும்,தங்கள் நேசத்திற்குரியவர்களை இழந்தவர்களையும் நினைவுகூருகின்றது.
அமைதி நீதி பொறுப்புக்கூறலிற்கான போராட்டமும் தங்கள் நேசத்திற்குரியவர்கள் எங்கிருக்கின்றார்கள் என அறிவதற்கான எண்ணற்ற குடும்பங்களின் போராட்டமும் இன்றுவரை தொடர்கின்றது.
தசாப்தங்கள் ஆன போதிலும் இதுவரை எவரும் சர்வதேச குற்றங்களி;ற்காக பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்தப்படவில்லை. குற்றங்கள் காரணமாக பலர் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களிற்கு எதிராக இனப்படுகொலையில் ஈடுபட்டது என குற்றம்சாட்டுகின்றனர்.
இலங்கையின் வடக்குகிழக்கு பகுதிகளில் நினைவுகூருவதை பெரும் ஆபத்துடனேயே பலர் முன்னெடுக்கவேண்டிய நிலை காணப்படுகின்றது.
நவம்பர் 27ம் திகதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்கான உரிமை தமிழர்களிற்குள்ளது என ஐநா மிகத்தெளிவாக தெரிவித்துள்ளது.
கடந்த பல வருடங்களாக பலவந்தமாக காணாமல்போனவர்களின் நிலை மற்றும் அவர்கள் இருக்குமிடம் குறித்து கண்டுபிடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் தீர்க்கமான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என இந்த வருடம் ஐக்கிய நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் புதிய அரசாங்கமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது எனினும் அவர்களும் யுத்த குற்றங்களிற்கான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளை நிராகரித்துள்ளனர்.
தமிழ் மக்களிற்கு அமைதிவழியிலான அரசியல் தீர்வொன்றை கண்டுபிடிப்பதி;ல் பிரிட்டன் தொடர்ந்தும் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும்.
நிரந்தரமான நல்லிணக்கத்திற்கு நீதியும் பொறுப்புக்கூறலும் அவசியம் இதனை கோருவதில் நாங்கள் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுடன் உறுதியாக உள்ளேன் என தெரிவித்துள்ளார்.