ஈழத்தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் – பிரான்சின் அனுசரணையில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – தமிழர் விளையாட்டுத்துறை 15 ஆவது தடவையாக நடாத்திய லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் நினைவுசுமந்த அனைத்துலக ரீதியிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி கடந்த (31.08.2024) சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கார்லே கோணேஸ் பகுதியில் அமைந்துள்ள விளையாட்டுத்திடலில் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்றது.
முன்னதாக பொதுச்சுடரினை விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையின் சார்பில் சிவகுருநாதன் மதியழகன் ஏற்றிவைக்க, பிரெஞ்சுத் தேசியக்கொடியை 95 விளையாட்டுக்கழகப் பொறுப்பச் திரு.யூட் ரமேஸ் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழத் தேசியக்கொடியை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப்பொறுப்பாளர் திரு.நிதர்சன் அவர்கள் ஏற்றிவைத்தார்.
ஈகைச்சுடரினை மாவீரர் லெப்.கேணல் விக்ரர் (ஒஸ்கா) அவர்களின் சகோதரர் ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
தொடர்ந்து பிரான்சு உதைபந்தாட்ட சம்மேளனக் கொடியை அதன் செயலாலளர் உருத்திரகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, பிரித்தானியா நாட்டுத் தேசியக்கொடியை பிரித்தானியா பாடும்மீன் வி.க. உறுப்பினர் திரு.கேதீஸ் அவர்கள் ஏற்றிவைக்க, சுவிசு நாட்டுத் தேசியக்கொடியை சுவிஸ் தெரிவு அணி பொறுப்பாளர் திரு.கந்தசாமி நந்தகுமார் அவர்கள் ஏற்றிவைத்தார்.