அண்மையில் டித்வா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு யாழ்ப்பாணம் கோண்டாவில் மேற்கு பகுதியைச் சேர்ந்த திருமதி. நிரஞ்சன் சத்தியதேவி 50 ஆயிரம் ரூபா நிதி உதவி வழங்கியுள்ளார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இலங்கை வங்கி கணக்கிற்கு நிதியினை வைப்பிலிட்டு அதற்கான பற்றுச்சீட்டின் பிரதியினை மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனிடம் மேற்படி பெண்மணி திங்கட்கிழமை (08.12.2025) கையளித்தார்.





