யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிகத் துறையின் முதலாவது பேராசிரியர் க.தேவராஜாவின் 75 ஆவது அகவை பவளவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) பிற்பகல்- 02.30 மணியளவில் யாழ்.இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் கோவில் வீதியிலுள்ள கந்தையா அன்னம்மா, இராசையா இராசம்மா அரங்கத்தில் தேவா பவள விழாச் சபையின் தலைவர் க.கனகராசா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பேராசிரியர்கள், கல்வியியலாளர்கள், கிராம மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.






