இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வனப்பகுதி ஒன்றில் சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பிலான 10 கஞ்சா தோட்டங்களை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
இதனையடுத்து 275,700 கஞ்சா செடிகளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அழித்துள்ளனர்.
கல்தொட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இரத்தினபுரி இராணுவ புலனாய்வு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்ய கல்தொட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





