பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்தானது, இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி இரண்டு கார்களுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் லொறி, தொடருந்து பாதையை நோக்கிச் சென்று தொடருந்து தண்டவாளத்தில் நின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.



