யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் தற்போது அதிகரித்துள்ள குருதி தேவையைக் கருத்திற் கொண்டு கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலையமும், குமரன் விளையாட்டுக் கழகமும் இணைந்து நடாத்தும் குருதிக் கொடை முகாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) காலை-08.30 மணி முதல் மாலை-03 மணி வரை கோண்டாவில் குட்டிச்சுட்டி முன்பள்ளி மண்டபத்தில் இடம்பெறும்.
இந்த இரத்ததான முகாம் நிகழ்வில் அனைவரையும் கலந்து கொண்டு பங்களிப்பு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.






