மினுவாங்கொடை – பன்சில்கோட பகுதியில் சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சனிக்கிழமை (06) இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
3755 லீற்றர் (30 பீப்பாய்கள்) கோடா, 90 லீற்றர் (120 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் மற்றும் மதுபானம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பன அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் 40, 42 மற்றும் 45 வயதுடைய, கொச்சிக்கடை மற்றும் ஹம்பாந்தோட்டை பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



