சரித்த ரத்வத்தவுக்கு பிணை!

ரணில் விக்கிரமசிங்கவின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகர் சரித்த ரத்வத்தவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (04) உத்தரவிட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க 2015 ஆம் ஆண்டில் பிரதமராக இருந்த காலத்தில் அவரது சிரேஷ்ட ஆலோசகராக சரித்த ரத்வத்த பணியாற்றியுள்ளார்.

2015 ஆம் ஆண்டில் இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக 50 களஞ்சியசாலைகளுக்கு சட்டவிரோதமாக பொருட்களை இறக்குமதி செய்து அரசாங்கத்துக்கு 90 மில்லியன் ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சரித்த ரத்வத்த இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சரித்த ரத்வத்த நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் இந்த வழக்கு ஜனவரி மாதம் 23 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.