மர்மமான முறையில் ஒருவர்உயிரிழப்பு!

வெலிவேரிய – வேபட வடக்கு பகுதியில் வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (08) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

உயிரிழந்தவர் வேபட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கம்பஹா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வெலிவேரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.