மழை குறைந்தாலும் ஆபத்து நீங்கவில்லை! – பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்!

பொதுமக்கள் கொதித்தாறிய நீரை மட்டுமே பருகுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமல் விஜேசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
மழைக்காலம் முடிந்து வெளியேறுவதால் டெங்கு, எலி காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், கொதித்தாறிய நீரை மட்டுமே பருகுமாறு கோரியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்மூலம் வயிற்றுப்போக்கு போன்ற நீர் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமீபத்திய அனர்த்த நிலைமை காரணமாக, சில பகுதிகளில் தொற்றுநோய் நிலைமை உருவாகும் அபாயம் உள்ளது.
நாடு முழுவதும் ஒருவகையான வைரஸ் காய்ச்சல் நிலைமை பரவி வந்த ஒரு காலகட்டத்தில்தான் இந்த அனர்த்த நிலைமையை நாம் எதிர்கொண்டோம்.
இதனால் இந்த வைரஸ் நிலைமை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வைத்தியர் குறிப்பிட்டார்.