மூதூரில் குடிநீர் குழாயை இணைக்கும் பணி முன்னெடுப்பு

மூதூரில் பிரதான குடிநீர் குழாயை இணைக்கும் பாரிய பணி முன்னெடுப்பு மூதூர் – நீலாபொல பகுதியில் இருந்து மூதூர் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு நீரை கொண்டு செல்கின்ற பாரிய குழாயானது அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் உடைக்கப்பட்டு சுமார் 150 மீற்றருக்கு அப்பால் கொண்டு செல்லப்பட்டிருந்தது.

இதனை இழுத்து கொண்டு வந்து இணைக்கும் பணி இன்று(6)காலை முதல் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதற்காக திணைக்கள ஊழியர்கள் படையினர் கட்டைபறிச்சான்,மூதூர்,அம்மன்நகர் கங்குவேலி உள்ளிட்ட அண்மைக் கிராமங்களில் உள்ள மக்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இது சீரமைக்கப்பட்ட பின்னர் மிக விரைவில் நீர் கொண்டு செல்லப்பட்டு நீர் சுத்திகரிக்கப்பட்டு விரைவாக மூதூருக்கான குடிநீர் விநியோகம் மீளவும் இடம்பெறும் என நீர் வழங்கல் வடிகாலமைப்புச சபையின் மூதூர் பொறுப்பதிகாரி கூறினார். கடந்த 9 தினங்களாக மூதூருக்கான குடிநீர் வழங்கல் முற்றாக தடைபட்டு உள்ளது.