வடமராட்சி மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளர் காண்டீபனின் தாயார் காலமானார்

யாழ்.வடமராட்சி மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான சி.த.காண்டீபனின் தாயார் திருமதி. தங்கராசா இராசேஸ்வரி (வயது-65)  இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) அதிகாலை-05 மணியளவில் யாழில் காலமானார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை குடத்தனையிலுள்ள அம்மையாரின் இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.