கிராண்ட்பாஸ் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படை ராஜகிரிய முகாம் அதிகாரிகள் குழுவினரால் நேற்று (08) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரிடமிருந்து 475 கிராம் ஹெரோயின் மற்றும் 8,000 மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேகநபர் கொழும்பு 13 ஐ சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





