தஞ்சை சமவெளிப் பகுதியை வேளாண்மை மண்டலமாக தமிழக அரசு சட்டப்பூர்வமாக அறிவித்ததற்குப் பின்னர் அங்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எண்ணெய் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதைக் கண்டித்து போராட்டம் நடத்திய விவசாய சங்கத் தலைவர்கள் பி.ஆர். பாண்டியன், செல்வராஜ் ஆகியோர் மீது மிகக் கடுமையான குற்ற வழக்குச் சட்டப் பிரிவுகளின் பேரில் 13ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தங்களின் நிலங்களை பாதுகாக்கப் போராடிய விவசாயிகளை வஞ்சம் தீர்க்கும் வகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் தூண்டுதலின்பேரில் காவல்துறை இந்த வழக்குகளைத் தொடுத்ததே தவறான முன்னுதாரணமாகும். எனவே, தமிழக அரசு தண்டிக்கப்பட்ட தலைவர்களை விடுதலை செய்து விவசாயிகளின் நலன்களைக் காப்பாற்றுவதற்கு முன்வருமாறு வேண்டிக்கொள்கிறேன். என உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள்.




