இங்கிலாந்திலுள்ள முக்கிய வைத்தியசாலைகளில் பணிபுரியும் போது 38 நோயாளர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக மருத்துவர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
38 வயதான மருத்துவர் நதானியேல் ஸ்பென்சர் மீது 15 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள், 17 தாக்குதல் குற்றச்சாட்டுகள் மற்றும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக ஒன்பது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்; தெரிவிக்கின்றன.
2017 மற்றும் 2021 க்கு இடையில், ராயல் ஸ்டோக் பல்கலைக்கழக வைத்தியசாலை மற்றும் மற்றொரு வைத்தியசாலைகளில் 38 நோயாளர்கள் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் 2026ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார், மேலும் விசாரணையின் முடிவு வரை அவரது மருத்துவப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



