எப்ஸ்டீன் தொடர்பு விவகாரம்: பிரிட்டன் அரச குடும்பத்தின் ஆண்ட்ரூ மவுண்ட் பேட்டன் கைது

பிரிட்​டன் மன்​னர் மூன்​றாம் சார்​லஸின் இளைய சகோதரர் ஆண்ட்ரூ மவுண்ட்​பேட்​டன்​-​வின்ட்​சர் (66) நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

இது குறித்து தேம்ஸ் வேலி காவல் துறை வெளி​யிட்​ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”பொதுப் பதவியைத் தவறாகப் பயன்​படுத்​தி​ய​தாக பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் கோப்புகளில் தெரிய வந்ததன் அடிப்​படை​யில், நார்ஃ​போக் பகுதியைச் சேர்ந்த 60 வயது மதிக்​கத்​தக்க நபர் ஒரு​வரை வியாழக்​கிழமை கைது செய்​துள்​ளோம் (ஆண்ட்ரூ பெயரை குறிப்பிடவில்லை).

இது தொடர்​பாக பெர்க்​ஷயர் மற்​றும் நார்ஃ​போக் பகு​தி​களில் உள்ள முகவரி​களில் சோதனை​கள் நடத்​தப்​பட்டு வரு​கின்​றன. பிடிபட்​டுள்ள நபர் தற்​போது காவல் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்​ளார். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்​ளது. கைது செய்யப்பட்டவரின் பெயரை காவல் துறை அதி​காரப்​பூர்​வ​மாக வெளி​யிட​வில்​லை.

என்​றாலும், பிபிசி உள்​ளிட்ட சர்​வ​தேச ஊடகங்​கள் அது ஆண்ட்ரூதான் என்​பதை உறு​திப்​படுத்​தி​யுள்​ளன. அமெரிக்​காவில் சிறார் பாலியல் குற்​றங்​களுக்​காகத் தண்​டிக்​கப்​பட்ட ஜெஃப்ரி எப்​ஸ்​டீனுடன் ஆண்ட்ரூ நெருங்​கிய தொடர்பு கொண்டிருந்​த​தாக நீண்​ட​ கால​மாகப் புகார் எழுந்து வந்​தது குறிப்பிடத்தக்கது.