அமெரிக்க விமானப்படை புதன்கிழமை (3) காலை வான்வெளிப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது F-16 போர் விமானம், ட்ரோனா (Trona) விமான நிலையத்துக்கருகில் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், விமானி அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பியதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பாலைவனப் பகுதியில் விமானம் கிழே விழுந்து தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்து வேளையில், விமானத்தில் சிக்கியிருந்த விமானி பரசூட் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும் அதன் பிறகே விமானம் கீழே விழுந்துள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விபத்திலிருந்து உயிர் தப்பிய விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விமானப்படையினர் கூறுகின்றனர்.
விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



