நீச்சல் குளங்களில் ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை: ஜேர்மன் நகரமொன்றின் முடிவு

ஜேர்மன் நகரமொன்று, நீச்சல் குளங்கள் மற்றும் சானாக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை விதித்துள்ளது.

ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை

பெண்களுக்குத் தெரியாமல், அவர்கள் உடை மாற்றும் அறைகளிலும், குளிக்கும் இடங்களிலும் அவர்களை புகைப்படம் அல்லது வீடியோ எடுக்கும் செயல்கள் உலகம் முழுவதும் அதிகரித்துவருகின்றன.

 

இந்நிலையில், அப்படிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுவருவதை மேற்கோள் காட்டி, ஜேர்மனியின் Brandenburg மாகாணத்திலுள்ள Potsdam நகரம், நீச்சல் குளங்கள் மற்றும் சானாக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்துவதற்குத் தடை விதித்துள்ளது.

ஏற்கனவே, நீச்சல் குளங்கள் போன்ற இடங்களில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படிப்பட்ட கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளை பயன்படுத்துவது குறித்து அந்த தடையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆகவே, தற்போது நீச்சல் குளங்கள் மற்றும் சானாக்களில் கமெராக்கள் பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண்ணாடிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்