4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு

சுவிட்சர்லாந்தை மையமாகக் கொண்ட, 4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனத்தின் நிறுவனரும், மருத்துவர்கள் உதவியுடன் தனது வழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.

Dignitas

’வாழ்ந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம், இறந்தாலும் கௌரவத்துடன் வாழ்வோம்’ என்னும் வழிகாட்டிக் கொள்கையைக் கொண்ட நிறுவனம், Dignitas.

 

பயங்கரமான நோய்களுடன் அவதிப்படுவோர் முதலானவர்கள், வாழ்வில் யாருக்கும் இனி பாரமாக இருக்கக்கூடாது என முடிவு செய்யும் நிலையில், அவர்கள் மருத்துவர்கள் உதவியுடன் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வதற்கு உதவிவந்த சுவிஸ் நிறுவனம்தான் Dignitas.

இந்த நிறுவனத்தின் உதவியுடன் இதுவரை 4,000க்கும் அதிகமானோர் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்கள்.

நிறுவனர் எடுத்த முடிவு

இந்நிலையில், Dignitas நிறுவனத்தின் நிறுவனரான Ludwig Minelli என்பவரும், தனது 92ஆவது வயதில் மருத்துவர்கள் உதவியுடன் தனது வாழ்வை முடித்துக்கொண்டுள்ளார்.

4,000 பேர் தங்கள் வாழ்வை முடித்துக்கொள்ள உதவிய நிறுவனம்: நிறுவனர் எடுத்த முடிவு | Dignitas Founder End Life Own Assist Dying Clinic

தனது பிறந்தநாளுக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், நேற்று முன்தினம், அதாவது, நவம்பர் மாதம் 29ஆம் திகதி, Ludwig தனது நிறுவனத்திலேயே தனது வாழ்வை முடித்துகொண்டதாக Dignitas நிறுவனம் தெரிவித்துள்ளது.இம்மாதம், அதாவது, டிசம்பர் மாதம் 5ஆம் திகதி, Ludwigஇன் 93ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.