ஐக்கிய அரபு அமீரகத்தின் மற்றுமொரு அனர்த்த நிவாரண சேவை விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று செவ்வாய்க்கிழமை (09) பிற்பகல் வந்தடைந்துள்ளது.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு பொருட்கள் மற்றும் அனர்த்த நிவாரண பொருட்கள் இந்த விமானத்தில் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானத்தில் உள்ள பொருட்களின் மொத்த நிறை 27 டொன் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானத்தில் 8 பேர் உள்ள நிலையில் எதிர்வரும் 14 நாட்களுக்கு இந்த விமானம் இலங்கையில் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் நோக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசாங்கத்தினால் இந்த அனர்த்த நிவாரண சேவை விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.







