காஸவுக்கான சர்வதேச உதவிப் படகில் பயணித்துக் கைது செய்யப்பட்ட பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாட்டுச் செயற்பாட்டாளர்களைக் கொடூரமான முறையில் அவமதித்த குற்றச்சாட்டின் கீழ், இஸ்ரேலின் தீவிர வலதுசாரி தேசிய பாதுகாப்பு அமைச்சர் இதாமர் பென்-க்வீர் பிரான்சுக்குள் நுழைவதற்கு அந்நாட்டு அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
இந்த இராஜதந்திரத் தடை உத்தரவை பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் ஜீன்-நோல் பரோட் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோகடந்த வாரம் சர்வதேச கடற்பரப்பில் வைத்து காஸா நோக்கிச் சென்ற சுமார் 50 உதவிப் படகுகளைக் கொண்ட ‘குளோபல் சுமூத் புளோட்டிலா’ குழுவை இஸ்ரேலிய கடற்படையினர் வழிமறித்து, அதில் பயணித்த சுமார் 430 சர்வதேசச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்தனர்.
இத்தாலி, பிரான்ஸ், நெதர்லாந்து, கனடா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள், இந்த ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தை மற்றும் மனித கண்ணிய மீறல்கள் குறித்து அடையாளப்படுத்தியிருந்தனர்.
மேலும் பென்-க்விர் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பரிசீலிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தையும் பாரோட் வலியுறுத்தியுள்ளார்.





