முல்லைத்தீவில் பத்து மாணவர்களுக்குச் சந்நிதியான் ஆச்சிரமத்தினரால் புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

முல்லைத்தீவு முத்துஐயன்கட்டு இடதுகரை அரசினர் தமிழ்க்கலவன் வித்தியாலயத்தில் தரம் – 5, தரம் – 6, தரம்- 8, தரம்- 9, தரம் – 10, மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்வி பயிலும் இடதுகரை, ஜீவநகர், குளக்கட்டுக் கிராமங்களைச் சேர்ந்த 10 மாணவர்களுக்குச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் 518,500 ரூபா பெறுமதியான புதிய துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை (24.05.2026) பிற்பகல் ஜீவநகர் முத்துமாரி அம்மன் அறநெறிப் பாடசாலையில் குறித்த உதவித் திட்ட நிகழ்வு நடைபெற்றது.