சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட கடன் செயற்திட்ட ஒப்பந்தம் இன்னும் ஏழு மாதங்களில் நிறைவடையவுள்ளதால், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் பொருளாதார, சமூக மற்றும் நிதி ரீதியான முன்னேற்றம் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் இன்று (09) செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமர்வின்போது நிலையியல் கட்டளை 27/2 இன் கீழ் கேள்விகளை முன்வைத்து உரையாற்றுகையில் இவ்வாறு வலியுறுத்தினார்.



