யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் சுகாதார தொண்டர்கள், தமக்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என கோரி ஆரம்பித்த போராட்டமானது இன்று (09) செவ்வாய்க்கிழமை நான்காவது நாளாகவும் நடைபெற்று வருகிறது.
இன்றைய போராட்டத்தில் இரு அணிகளாக பிரிந்த சுகாதார தொண்டர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவும், கொழும்பில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.



