இதுகுறித்து இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழு அறிவித்துள்ளதாவது,
அரசாங்க வலைத்தளங்கள் மற்றும் கணினி அமைப்புகளை குறிவைத்து நடத்தப்படும் சைபர் தாக்குதல்களால் ஏற்படும் தொடர்ச்சியான அபாயங்களை தவிர்க்க வேண்டியுள்ளது. அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான கட்டமைப்புகளை மீட்டெடுப்பது கணிசமான வருடாந்த செலவுகள் அதிகரிப்பதற்கு காரணமாகின்றது. இதனால் பொதுமக்கள் நிதி கணிசமாக வீணாகின்றது.
ஆகவே அரச நிறுவனங்கள் முழுவதும் சைபர் பாதுகாப்பை வலுப்படுத்த ஒரு விரிவான உத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், அரச ஊழியர்களின் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துதல், சைபர் அச்சுறுத்தல்களை திறம்படக் குறைப்பதற்கான அறிவு மற்றும் திறன்களுடன் அவர்களைச் வலுவூட்டல் என்பனவாகும்.
பல்வேறு அரச துறைகளுக்கான விழிப்புணர்வு அமர்வுகளுடன், இந்தத் திட்டம் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்குள் மேலும் பல நிறுவனங்களைச் சென்றடைய திட்டமிட்டு, இப்பயிற்சி முயற்சிகளை மேலும் விரிவுபடுத்துவதை இத்திட்டம் கொண்டுள்ளது என்றுள்ளது.