இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் புலமைப் பரிசில்கள் பகிர்தல்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டில் தொழில் பணிபுரியும், பணிபுரிந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கான புலமைப் பரிசில்கள் பகிர்தல் நிகழ்வு  சனிக்கிழமை (28.12.2024) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாகாண சிரேஷ்ட முகாமையாளர் திருமதி எல்.லக்சாயினி  தலைமையில் இடம்பெற்றது.

நிகழ்வில் யாழ்.மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் யாழ்.மாவட்ட அலுவலகத்திற்கான பொறுப்பதிகாரி ரி.கோடீஸ்வரன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் மாவட்ட இணைப்பாளர் தி.பிராங்கிளின், பணியகத்தின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.