சட்ட விரோதமாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணல் கிளிநொச்சியில் மீட்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீவில் பகுதியில் சட்டவிரோதமாக முறையில் களஞ்சியப்படுத்த பட்டிருந்த ஒரு தொகை மணல்  கிளிநொச்சி மாவட்ட  குற்றத்தடுப்பு  பொலிஸ்   பிரிவினால் இன்று வெள்ளிக்கிழமை (27) மீட்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக  அகழ்ந்தெடுக்கப்பட்ட  மணல் களஞ்சியப் படுத்தப்பட்டிருப்பது தொடர்பில்  பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  கிளிநொச்சி மாவட்ட  குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் குறித்த  இடத்திற்கு சென்று களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த மணலை மீட்டுள்ளனர்.