தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் சுனாமிப் பேரலையில் உயிரிழந்தோரை நினைவு கூர்ந்து நடாத்திய 20 ஆவது ஆண்டு நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (26.12.2024) மாலை பூநகரி வெட்டுக்காடு பாத்திமா தேவாலய முன்றலில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முதலில் கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து “இயற்கையுடன் இசைந்து வாழ்ந்தால் இயற்கைச் சீற்றங்களின் பாதிப்புக்களைத் தணிக்க முடியும்” எனும் தலைப்பில் பொன்னுத்துரை ஐங்கரநேசன் சூழல் விழிப்புணர்வு உரை ஆற்றியதுடன் மாணவர்களுக்கு கற்றல் உபகாரணங்களும் வழங்கப்பட்டன.