சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஞானச்சுடர் மார்கழி மாத 324 ஆவது இதழ் வெளியீட்டு நிகழ்வு வெள்ளிக்கிழமை (27.12.2024) முற்பகல்-10.45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நிகழ்வில் ஓய்வுநிலைக் கிராம அலுவலர் சோ.பரமநாதன் மலரின் வெளியீட்டுரையையும், ஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆ.ஶ்ரீஸ்கந்தமூர்த்தி மலரின் மதிப்பீட்டுரையையும் ஆற்றவுள்ளனர்.