தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரனின் பூர்வீக வீட்டில் பிறந்த நாள் விழா

வல்வெட்டித்துறை ஆலடி பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீடு அமைந்திருந்த காணிக்குள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கேக் வெட்டி பிறந்த தினத்தினை கொண்டாடியதுடன், நிகழ்வின் நினைவாக, வீடு அமைந்திருந்த காணிக்குள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

கொண்டாட்ட நிகழ்வில் விடுதலைப்புலிகளின் தலைவரது புகைப்படத்தினை கொண்ட பதாகையொன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

அவ்வேளை,  அங்கு வந்த வல்வெட்டித்துறை பொலிஸார் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை காட்சிப்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்றும்  புகைப்படத்தினை நீக்கிவிட்டு பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வை நடத்துங்கள் என்றும்  அறிவுறுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், பதாகையில் இருந்த விடுதலைப்புலிகளின் தலைவரது புகைப்படத்தை மறைத்துவிட்டு, பிறந்தநாளை அனுஷ்டித்தனர்.

விடுதலைப்புலிகளின் தலைவரது பூர்விக வீடு இடித்தழிக்கப்பட்டு, தற்போது வெறும் காணி மட்டுமே அங்கு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்