திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்களுடன் நால்வர் கைது !

புலத்சிங்கள, மீகஹவத்தை மற்றும் ஹொரணை ஆகிய பிரதேசங்களில் வைத்து திருடப்பட்ட 03 மோட்டார் சைக்கிள்கள் மற்றும்  உதிரி பாகங்களுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று வியாழக்கிழமை (16) கைது செய்யப்பட்டதாக புலத்சிங்கள பொலிஸார் தெரிவித்தனர்.

புலத்சிங்கள பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹொரணை, பெல்லம்பிட்டி, கிரிபத்கொடை மற்றும் கடுவலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் புலத்சிங்கள மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் தற்காலிகமாக வசித்து இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நால்வரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.