தெல்லிப்பழையில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

சுனாமிப் பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்.தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலயம் கலைக்கூடத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (26.12.2024) தெல்லிப்பழை முதியோர் சங்கத்தின் செயலாளர் வி.தனராஜ் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.

நிகழ்வில் மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி.ஆனந்தனின் கைவண்ணத்தில் உருவான வரலாற்றுப் பதிவான சுனாமிச் சிற்பத்தின் முன்பாக காலை-09.25 மணியளவில் நினைவுச் சுடர்கள் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சுனாமியால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட அக வணக்கமும் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மறைந்த சிற்பக் கலைஞர் ஏ.வி.ஆனந்தனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து நினைவுச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிற்பங்களின் கண்காட்சியும் நடைபெற்றது.