தெல்லிப்பழையில் சுனாமி நினைவேந்தல் தொடர்பில் காவல் துறை புலனாய்வாளர்கள் விசாரணை!

சுனாமிப் பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  வியாழக்கிழமை (26.12.2024) நாடாளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில் தெல்லிப்பழை துர்க்காபுரத்தில் அமைந்துள்ள சிற்பாலயம் கலைக்கூடத்திலும் வழமை போன்று நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்பட்டது. அத்துடன் கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றது.

இந் நிலையில் நேற்று முன்தினம் நண்பகல்-12 மணியளவில் குறித்த நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிற்பாலயம் கலைக் கூடத்திற்குத்

தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்திலிருந்து சிவில் உடையில் சென்ற இரண்டு பொலிஸ் புலனாய்வாளர்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகள் ஏதாவது செயற்பாடுகள் இடம்பெறுகின்றனவா? என்ற அடிப்படையில் நினைவேந்தல் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான  இளைஞரிடம் விசாரணைகள் நடாத்தினர். அத்துடன் அவரது அடையாள அட்டையைப் பெற்று புகைப்படம் எடுத்ததுடன் குறித்த நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த  வரலாற்றுச் சிற்பமான சுனாமிச் சிற்பத்தையும் புகைப்படம் எடுத்துச் சென்றுள்ளனர்.