கொழும்பு – நாரஹேன்பிட்டியில் கடந்த 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
2016இல் நாரஹேன்பிட்டி பிரதேசத்தில் மரண வீடொன்றில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டு, மற்றுமொருவர் காயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 6 பேரும், நீண்ட கால விசாரணைகளின் பின்னர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து, நீதிமன்றம் இந்த மரண தண்டனையை விதித்துள்ளது.