நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு கைதிகள் தப்பியோட்டம்!

காலி சிறைச்சாலையிலிருந்து உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (16) இடம்பெற்றுள்ளது.

தப்பிச் சென்ற கைதிகள் இருவரும் உடுகம மற்றும் நாகொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சம்பவத்தன்று, கைதிகள் இருவரும் வழக்கு விசாரணைக்காக உடுகம நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பின்னர், கைதிகள் இருவரும் வழக்கு விசாரணையை முடித்துவிட்டு மீண்டும் காலி சிறைச்சாலைக்குச் செல்வதற்காக சிறைச்சாலை பஸ்ஸில் ஏற முயன்ற போது சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலிதக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.