பருத்தித்துறைக் கடற்பரப்புக்குள் மீனவர்களைப் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல்!

வடக்குப் பிராந்திய இலங்கை கடற்படையினர் இன்று வெள்ளிக்கிழமை (17.01.2025) பருத்தித்துறைக் கடலில் கடற்படைக் கலமான SLNS RanaWickrama கலத்திலிருந்து சூட்டுப் பயிற்சி மேற்கொள்ளவிருப்பதால் நாளை காலை- 08 மணியிலிருந்து மாலை-05 மணி வரை மீனவர்களைக் குறித்த பகுதிக்குள் பிரவேசிக்க வேண்டாமென அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது

இலங்கைக் கரையோரக் காவற்படையின் வடக்குப் பிராந்தியப் பணிப்பாளர் யாழ்ப்பாணம் கடற்தொழில் நீரியல்வளத்துறைத் திணைக்களம் ஊடாக அனைத்துக் கடற்தொழில் சங்கங்களுக்கும் குறித்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.