மனுஷ நாணயக்காரவின் சகோதரர் பிணையில் விடுதலை

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் சகோதரரான திசர ஹிரோஷன நாணயக்காரவை பிணையில் விடுதலை செய்ய கம்பஹா நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.

திசர ஹிரோஷன நாணயக்கார ஒரு கோடி ரூபா பெறுமதியான நான்கு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாகக் கூறி பண மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் திசர ஹிரோஷன நாணயக்கார பிபில பிரதேசத்தில் வைத்து டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.