முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகே உட்பட இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகே உட்பட இருவரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளது.

நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உட்பட்ட காணி ஒன்றிற்குரிய நஷ்ட ஈட்டை விரைவாக பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதாக வர்த்தகர் ஒருவரிடமிருந்து 90 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சலோஷன கமகேவும் வர்த்தகர் ஒருவரும் கொழும்பு புறக்கோட்டை பகுதியில் வைத்து கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.