தேசிய பாதுகாப்புத் தினம் மற்றும் சுனாமி ஆழிப்பேரலையின் 20 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை (26.12.2024) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் தேசியக் கொடியேற்றப்பட்டு சுனாமி மற்றும் ஏனைய அனர்த்தங்களால் உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சர்வமத ஆத்மசாந்திப் பிரார்த்தனை நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து சுனாமி முன்னாயத்தம் தொடர்பான விழிப்புணர்வுக் காணொளியும் காட்சிப்படுத்தப்பட்டது.