தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (25.12.2024) மாலை-04.30 மணியளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் மூத்த போராளி பொன் மாஸ்ரர் தலைமையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இதேவேளை, ஜோசப் பரராஜசிங்கம் கடந்த-2005 ஆம் ஆண்டு டிசம்பர்- 24 ஆம் திகதி மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியாள் தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது துப்பாக்கிதாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். சம்பவத்தில் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார். ஜோசப் பரராஜசிங்கத்தின் தமிழ்த்தேசியப் பணிகளுக்கு மதிப்பளித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் “மாமனிதர்” எனும் உயரிய விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.