அனுராதபுரத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த “ரஜரட்ட ரெஜின” ரயிலானது கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கும் தலைமைச் செயலக ரயில் நிலையத்துக்கும் இடையே தடம் புரண்டுள்ளது.
இன்று வெள்ளிக்கிழமை (29) காலை 11.10 மணியளவிலேயே இந்த ரயில் தடம் புரண்டுள்ளது.
ரயிலின் என்ஜின் பகுதி தடம் புரண்டதோடு, ரயில் பாதையும் சேதமடைந்து காணப்படுகிறது.