யாழ்நகரில் அரியாலை,கோப்பாய்,இருபாலை,நாவாந்துறை, நல்லூர், கொழும்புத்துறை, நாயனமார்க்கட்டு, செம்ணி, கோவில்வீதி, கொட்டடி,கோட்டையை அண்மித்த பகுதிகள், தட்டாதெருவினைச் சூழ உள்ள சில பகுதிகள், தாவடி போன்ற பகுதிகள் நீரில் மூழ்கிய வண்ணம் உள்ளது. மக்கள் பாடசாலைகள் நோக்கி புறப்பட்ட வண்ணம் உள்ளனர்.
முல்லைத்தீவு 70%, கிளிநொச்சி62% நீரில் மூழ்கியுள்ளது. அனர்த்த முகாமைத்துவம் முன்னர் மஞ்சள் எச்சரிக்கை விட்டிருந்து. தற்போது வடமாகாணம் முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விட்டுள்ளது. தீவகம் செல்லும் பாதை(அல்லைப்பிட்டி) நீரில் மூழ்கியுள்ளது. எச்சரிக்கையாக வீட்டில் இருங்கள். வேடிக்கை பார்ப்பதைத் தவிருங்கள்.
சீரற்ற காலைநிலை இன்னும் 3நாட்கள் தொடரலாம். கவலைக்கிடமான நிலையில் வட மாகாணம் உள்ளது.
வட மாகாணத்தில் பலத்த காற்று வீசி வருகின்றது இதனால் மின் வடங்கள் (conductors/கரண்ட் கம்பிகள்) அறுந்து விழக்கூடும் இவ்வாறு அறுந்து விழுந்திருப்பது அவதானிக்கப்பட்டால் உடனடியாக மின்சார சபைக்கு அறிவிப்பதோடு மின்சார சபையினர் வந்து மின் இணைப்பை துண்டிக்கும் வரை அதன் அருகில் ஒருவரையும் செல்ல விடாது காத்திருந்து சமூக நலன் பேணவும்.
எந்நேரமும் தொடர்பு கொள்ளக் கூடிய இலங்கை மின்சார சபையின் தொலைபேசி இலக்கம் (021) 202 4444
அல்லது கீழ் வரும் பொருத்தமான பிரதேசங்களுக்கு
ஏற்புடைய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
Jaffna 0212222609
Thirunelveli Kondavil 0212222498
Chunnakam 0212240301
Chavakachcheri 0212270040
Point Pedro 0212263257
Vaddukoddai 0212250855
Velanai 0212211525.