சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது

சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கான வாயிலாக இந்தப் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் காணப்படுவதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அடங்கிய இரண்டு மாடி கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (6) நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

மகத்தான தொல்பொருள் மதிப்புமிக்க சோமாவதி விகாரையின் வரலாற்றில் நுழைவதற்கான வாயிலாக இந்தப் புதிய தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் சர்வதேச தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைந்த முறையான அபிவிருத்தித் திட்டத்தின் விளைவாக வரலாற்று சிறப்புமிக்க சோமாவதி விகாரையை உலக மக்களுக்கும் இலங்கை மக்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் இதனூடாக நிறைவேற்றப்படுகிறது என்றார்.