மீட்டியாகொட – சீனிகமவில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

மீட்டியாகொட – சீனிகம பகுதியில், ஹெரோயின் போதைப்பொருளுடன் ஞாயிற்றுக்கிழமை(09) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து, 06 கிலோகிராம் 534 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் ஹிக்கடுவை – சீனிகம பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

மீட்டியாகொட பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.