தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பு

இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபனைச் செவ்வாய்க்கிழமை (19.08.2025) காலை-09 மணியளவில் யாழ்.மாவட்டச் செயலர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பில் இந்த வருடம் மேமாதம் மாவட்டத்தில் நடந்த உள்ளூராட்சிசபைத் தேர்தல் தொடர்பாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் கேட்டறிந்து கொண்டார்.