மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை (05) கடும் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
07 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும், 08 மாவட்டங்களுக்கு சாதாரண எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதிகளில் கடுமையான மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மின்னல் தாக்கத்தால் ஏற்படக்கூடிய சேதங்களைக் குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- திறந்த வெளியில் அல்லது மரங்களுக்கு கீழ் நிற்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
- பாதுகாப்பான கட்டடங்கள் அல்லது பாதுகாப்பான வாகனங்களில் இருங்கள்
- வயல் வெளி, தேயிலைத் தோட்டம், விளையாட்டு மைதானம் மற்றும் நீர் நிலைகள் போன்ற இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
- திறந்த வெளியில் கைத்தொலைபேசிகளை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது
- மின்சார உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
- சைக்கிள், உழவு இயந்திரம் மற்றும் படகு போன்றவற்றை பயன்படுத்தவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்
- கடும் காற்றினால் மரங்கள் மற்றும் மின்சார கம்பங்கள் முறிந்து விழுவதற்கு வாய்ப்புகள் காணப்படுவதால் விழப்புடன் இருங்கள்
- அவசர நிலைமைகளில் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரியின் உதவியைப் பெற்றுக் கொள்ளுங்கள்



